Welcome
KANNAA HEALTH CARE (கண்ணா ஹெல்த் கேர்)
பாரம்பரிய இராஜ சித்த வைத்திய புற்றுநோய் சிகிக்சை மையம்
Best siddha clinic for cancer treatment
உலகம் எல்லாம் மண்ணாதி பூதமொடு விண்ணுமாகி- இந்த உலகம் மண் முதலான நீர் நெருப்பு காற்று ஆகாயம் என பஞ்ச பூதங்களால் ஆனது, அதுபோலவே நம் உடம்பும்
"அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது"
என்ற கூற்று படி நம் உடலிலும் பஞ்ச பூத தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. "ஒரு மனிதன் உலகமெல்லாம் தனதாக்கி கொண்டாலும் தன் ஆன்மாவை- உயிரை- உடலை இழந்தால் என்ன பயன்." எனவே தான் திருமூலரும்
"உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே" எனக் கூறி உள்ளார். உடம்பை வளர்ப்பது என்பது உடம்பில் உள்ள பஞ்ச பூதத்தை முறையாக பராமரித்து அதிலும் முக்கியமாக திரிதோஷங்கள் என்று கூறும் வாதம் (காற்று),பித்தம் (தீ) ,கபம் (நீர்) அதன் அளவுகளில் இயங்க நாள் ஒழுக்கங்களை கடைபிடிக்க பெரும்பொழுது(வருட பிரிவு) சிறும்பொழுது (நாள்பிரிவு) ஆக சித்தர்கள் வகுத்து அந்த காலங்களில் மனிதர்கள் எப்படி இயங்க வேண்டும் என கூறி உள்ளார்கள். அந்த ஒழுக்கங்களில் முரண்பாடு
- உணவு
- பழக்க வழக்கம்
- வாழ்வியல் முறை
- சூழ்நிலை
- கிரக கோட்சாரம்
ஆகிய காரணங்களால் ஏற்படும்போது மனித உடலில் 72,000 நாடி நரம்புகளில் மாற்றம் ஏற்பட்டு 4,448 நோய்கள் ஏற்படும் என சித்தர்கள் வகுத்து கூறியுள்ளனர்.
இப்படி ஏற்படும்
- வாதம் 80
- பித்தம் 40
- கபம் 96
வகைகள் எனக் கூறியுள்ளனர். இந்த மாற்றங்களால் உடலில் பஞ்ச கிரியா-வாகிய
- பசியின்மை
- அஜீரணம் - வாயு உப்புசம்
- அசதி பலகீனம்-சுறுசுறுப்புயின்மை
- தூக்கமின்மை
- மல சிக்கல் ,ஜல சிக்கல்
அகியவற்றில் முரண்பாடு ஏற்படுகிறது.
மேலும் சப்த தாதுக்களான
- சாரம் - அன்னரசம்
- செந்நீர் - இரத்தம்
- ஊண் - தசை
- கொழுப்பு - கொழுப்பு
- எண்பு - எலும்பு
- மச்சை - மூளை
- விந்து நாதம் - உயிரணு,கருமுட்டை
ஆகியவற்றில் மாற்றம் கண்டு இராஜ உறுப்புகளான
- மூளை
- இதயம்
- நுரையீரல்
- கல்லீரல்
- சிறுநீரகம்
ஆகியவற்றிலும் அதன் துணை உறுப்புகளான மண்ணீரல், கணையம், பித்தப்பை ,சிறுநீர்ப்பை, கற்பப்பை , விதைப்பை, சினையகம் மற்றும் நாளமில்லா சுரப்பிகளான தைராய்டு, பாரா தைராய்டு, பிட்யூட்டரி, பீனியல், தைமஸ்,அட்ரீனல்,லாங்கர் ஹான் திட்டுக்கள் ஆகிய ஹார்மோன்கள் மற்றும் நிணநீர் சுரப்பிகள், தமணிகள், சிரைகள் ஆகிய
இரத்தநாளங்களிலும் நாடி நரம்புகளிலும், ஐம்பொறிகளாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி மற்றும் அவற்றின் செயல்களிலும் ஆறு ஆதாரங்களாகிய மூலாதாரம், சுவாதிஷ்டானம் ,மணிபூரகம் ,அனாகதம் ,விசுத்தி, ஆக்கினை ஆகிய ஆறு சக்கரங்களிலும் இவைகள் அடங்கிய 96 தத்துவங்களிலும் மாற்றம் ஏற்பட்டு
மனிதனுக்கு நோயாக வரும். அவை
- முத்தோஷ முரண்பாடு
- ஜன்னி
- மேகம்
- கிருமி தொற்று
- கழிவு தேக்கம்
- சத்துக்குறைபாடு
ஆகிய நோய்களாக வெளிப்படும். இந்த பிரச்சனைகளை கஷ்டங்களை குறைகளை இயற்கையான முறையில் சரிபடுத்தி சீர்படுத்தி செம்மைப்படுத்தி ஒழுங்குபடுத்துவதே சித்த வைத்தியம் ஆகும்.
இந்த சித்த வைத்தியம்
- பாரம்பரிய சித்த வைத்தியம்
- பட்டதாரி சித்த வைத்தியம்
என இரு பிரிவு உண்டு. பாரம்பரிய சித்த வைத்தியத்தில்
உயர் படி நிலையாக -
பாரம்பரிய இராஜ சித்த வைத்தியம் என்ற ஒன்று உண்டு.
பாரம்பரிய ராஜ சித்த வைத்தியம் என்பது
பொருட்களை சஞ்சீவி மூலிகைகள் காயகற்ப மூலிகைகள் சேர்த்து முறைப்படி மருந்தாக்கி அதனுடன் இராஜ வைத்திய பொருளாகிய
தொப்புள்கொடி (அ) தாயத்து மருந்தை சேர்த்து(strem cell) தயாரித்து மருந்தை படிநிலைகளில்
- கட்டு
- களங்கு
- குரு கட்டு
- குரு களங்கு
- மூப்புரசம்
- ஜெய ரசம்
- குரு ஜெயநீர்
- குருமூப்பு ஜெயநீர்
- ராஜநாக குருமூப்பு ஜெயநீர்
- பைரவம்
- கேசவம்
- புவணம்
- அஸ்திரம்
- ராஜம்
- பீமராஜம்
- மகாராஜம்
போன்ற மருந்து படிநிலைகளாக உயர்த்தி நோயை குறைந்தபட்சம் 3 நாள்முதல் அதிகபட்சம் 48 நாட்களுக்குள் (இராஜாக்களுக்கும், அரண்மனையில் உள்ளவர்களுக்கும், சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களுக்கும், செல்வந்தர்களுக்கும்) தீர்க்கும் முறையாகும். இம்மருந்துகளைக் கொண்டு நாம் பாரம்பரிய ராஜ சித்தவைத்தியம் முறையில் மனித உடலில் உள்ள அனைத்து நோயையும் (4,448 நோயையும்) குணமாக்கலாம்.இம்முறையில் செயல்படுவதே நம் கண்ணா ஹெல்த் கேர் பாரம்பரிய இராஜ சித்த மருத்துவ சாலை ஆகும்