Wild flowers, plants and fungi are the life support
Siddha-Cancer cure center
உலகத்திலே உள்ள பாரத புண்ணிய பூமியில்,தமிழகத்தில் பூட்டுத்தாக்கில் (இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு-வேலூர் சாலை இரத்தனகிரி பால முருகன் திருக்கோயில் அருகில் உள்ள கிராமம்) திரு சின்னக்குழந்தை (எ) கிருஷ்ணன் என்ற விவசாயி. அவர் அவருடைய குருவழிகாட்டுதலின்படி இதய நோய்க்கு மட்டும் (மார்பு வலி, மார்பு எரிச்சல் இடுப்பு வலி, முட்டி வலி, கைகால் வலி, அசதி, பலகீனம் ஆகியவைகளுக்கு) இலவசமாக வைத்தியம் செய்து வந்தார். விவசாய குடும்பத்தை சேர்ந்த விவசாயியான இவருக்கு முன் யாரும் இவர் குடும்பத்தில் வைத்தியம் செய்ததில்லை. இவருக்கு பின் இவர் மகனாகிய ரேணு என்பவர் சித்தா ஆயுர் வேதா யுனானி மற்றும் ஹோமியோபதி மருத்துவம் அவர் குரு வழிகாட்டுதலின் படி தமிழக அரசு பதிவு பெற்று செய்து வருகிறார்.
அவருடைய மகன்களாகிய திரு பூ.ரே.சந்திரசேகரன் மற்றும் திரு ரே.சுரேஷ் பாபு ஆகிய இருவரும் தந்தை மற்றும் பல குருமார்கள் அறிவுரைப்படி வழிகாட்டு நெறிமுறைகளோடு வைத்தியம் செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவரான பாரம்பரிய இராஜ சித்த வைத்தியர் பூ.ரே.சந்திரசேகரன் என்பவர் கண்ணா ஹெல்த் கேர் வேலூர் என்ற வைத்திய சாலையையும், மற்றொருவர் ரே.சுரேஷ் பாபு என்பவர் ஸ்ரீ அகத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி & சிகிச்சை மையம் பூட்டுத்தாக்கு என்ற வைத்திய சாலையையும் நடத்தி நோய்களுக்கு சிகிக்சை அளித்து வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் பல பட்டதாரி சித்த மருத்துவர்களின் துணை மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையிலும் மருத்துவ சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மருத்துவ சேவை பணி செய்து வருகின்றனர்.